Search This Blog n

06 January 2015

கடத்தி வரப்பட்ட 1,200 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது


 தமிழகத்தில் இருந்து  பெங்களூரு புறநகர் ஆனேக்கல் டவுனில் உள்ள ஒரு கோவில் அருகே மர்மநபர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக ஆனேக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 
போலீசார் வருவதை பார்த்ததும் அங்கு சாக்கு மூட்டைகளுடன் நின்றிருந்த 5 பேர் தப்பி ஓடினார்கள்.
சிறிது தூரம் ஓடியதும் 5 பேரும் தாங்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை போட்டு விட்டு தப்பி ஓடினர். ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
அதன் பின்னர் சாக்கு மூட்டைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆனேக்கல்லை சேர்ந்த சீனிவாசன் (வயது 52) என்பது தெரிந்தது.
மேலும் தமிழ்நாட்டில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, அவற்றை ஆனேக்கல்லுக்கு கடத்தி வந்து விற்க முயன்றது தெரியவந்தது. சீனிவாசனிடம் இருந்து 1,200 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சீனிவாசன் மீது ஆனேக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 4 பேரையும் தேடிவருகிறார்கள்.


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment