Search This Blog n

07 January 2015

கடற்கரையில் ஆள் இல்லா குட்டி விமானம் பறந்ததால் பரபரப்பு!!!

சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகர் கடற்கரை பகுதியில் இன்று காலை 11 மணியளவில் ஆள் இல்லாத குட்டி விமானம் ஒன்று பறந்தது.

இதை அந்த பகுதியை சேர்ந்த பலர் வேடிக்கை பார்த்தனர். அந்த குட்டி விமானம் அங்குள்ள ஒரு தங்கும் விடுதி மீது வட்டமிட்டது.

இது பற்றி அந்த விடுதியின் பாதுகாப்பு அதிகாரி மயிலாப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களும் அங்கு பறந்த ஆள் இல்லா குட்டி விமானத்தை பார்த்தனர்.

அப்போது திடீர் என்று அந்த குட்டி விமானம் மெதுவாக கீழே இறங்கியது. உடனே அதிகாரிகள் அதை கைப்பற்றி மயிலாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அது கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் உயர் அதிகாரிகள், நுண்ணறிவு பிரிவினர், மாநில உளவுப்பிரிவு அதிகாரிகள் ஆகியோர் அந்த விமானத்தை ஆய்வு செய்தனர்.

அந்த குட்டி விமானத்தில் துல்லியமாக படம் பிடிக்கும் நவீன கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை ஐ.ஐ.டியில் உள்ள அனுபவ மிக்க தொழில்நுட்ப வல்லுனர்களை வரவழைத்தும் ஆய்வு நடைபெற்றது.

இந்த குட்டி விமானத்தை பறக்க விட்டது யார்? ரிமோட் மூலம் இயக்கியது யார்? எதற்காக பறக்க விட்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment