Search This Blog n

05 January 2015

இந்த ஆண்டு 41வது சுற்றுலா பொருட்காட்சி விழா !

சென்னையில் தொடங்கிய 41வது சுர்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் தொடக்க விழா சோபிக்கவில்லை. மாறாக கூட்டமே இல்லாமல் அழுது வடிந்தது.

ஜெயலலிதா முதல்வராக இல்லாத நிலையில் இந்த பொருட்காட்சி நடப்பதால், கூட்டம் சேராமல் அரசுத் தரப்பே பார்த்துக் கொண்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு ஆட்களின் தலையே இல்லாமல் மிகக் குறைவான நபர்களே வந்திருந்தனர்.

சென்னையில் வருடா வருடம், தமிழக அரசின் சார்பில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு 41வது சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியுள்ளது. தீவுத் திடலில் இது நடைபெறுகிறது.
இதற்கான நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 20 என்றும், சிறார்களுக்கு ரூ. 10 என்றும் நிர்ணயித்துள்ளனர்.
இந்தப் பொருட்காட்சியில் அரசுத் துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை ரூ.86.5 லட்சம் செலவில் அமைத்துள்ளனர்.
இந்த பொருட்காட்சியை ஜனவரி 3ம் தேதி அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார்.
சுற்றுலா பொருட்காட்சியில் அரசுத் துறைகளுக்கு 50 அரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 120 சிறிய தனியார் கடைகளும், 50 தனியார் பெரிய கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு பூங்காவும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா பொருட்காட்சி 70 நாட்களுக்கு நடத்தப்படும்.
பொருட்காட்சியின் சிறப்பாக, பனி லிங்கம் புகழ் அமர்நாத் குகைக் கோவிலை தத்ரூபமாக அரசு அமைந்துள்ளது. எனவே அமர்நாத் பனி லிங்கத்தை பக்தர்கள் சென்னையிலேயே தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் அமர்நாத் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் பல இந்துக் கடவுள்களின் சிலைகளும் வைக்கப்படவுள்ளன. கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு கை, கால்களை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக நீர்த் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
புறநகரில் இருந்து மக்கள் தீவுத்திடலுக்கு வருவதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொடக்க விழாவின்போது விரல் விட்டு எண்ணி விடும் அளவிலேயே கூட்டம் காணப்பட்டது. கூட்டம் சேர்க்க அரசுத் தரப்பிலும் ஆர்வம் காட்டவில்லை போலும். “அம்மா”வே ஆட்சியில் இல்லை. பிறகெதற்கு கூட்டம், ஆடம்பரம் என்று அடக்கி வாசித்து விட்டார்கள் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment