Search This Blog n

19 January 2015

இன்று மங்கள சுஷ்மாவுடன் புதுடில்லியில் மோடியுடன் பேச்சு


வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
ஏற்கனவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கலந்து கொண்ட உயர்மட்டக்குழுவின் கூட்டம் நேற்று புதுடில்லியில் நடைபெற்றது.
இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக புதுடில்லி சென்று ள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரஇ இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற ஒரு வார காலத்திற்குள்இ அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதால் இது முக்கியத்துவம்
 வாய்ந்த சுற்றுப்பயணமாக கருதப்படுகிறது.
மேலும் மங்கள சமரவீர மற்றும் சுஷ்மா சுவராஜ் இடையேயான சந்திப்பின் போதும் கூடஇ தாங்கள் இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக மங்கள சமரவீரஇ இந்திய                         அமைச்சரிடம்   கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும் இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்தி வந்தபோதும் கூட சீனாஇ பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமும் சமமான உறவை ஏற்படுத்தி வந்தது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கத்தில் தான்இ இத்தகைய செயல்களில் இலங்கை ஈடுபடுவதாக அப்போது இந்திய தரப்பில்
 விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கம்இ இந்தியாவுக்கு முதல் முக்கியத்துவம் அளிப்பதாக வெளிப்படுத்தியுள்ளது. இருநாட்டுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர் என்று பி.பி.சி. தெரிவித்துள்ளது.
நேற்றைய சந்திப்பின்போது மீனவர்கள் விவகாரம்இ தமிழர்கள் நல்வாழ்வுஇ வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில் இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் குறித்தும் அப்போது ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment