Search This Blog n

05 January 2015

6 கோடி மக்கள் வறுமை நிலைக்கு மருத்துவ செலவு அதிகரிப்பால்!!

 மருத்துவ செலவு அதிகரிப்பால் ஆண்டுக்கு 6 கோடி பேர் வறுமை நிலைக்கு ஆளாகிறார்கள் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும் 
வறுமையை ஒழிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இருந்தாலும் மருத்துவ செலவு அதிகரிப்பு காரணமாக, இந்தியாவில் ஆண்டுக்கு 6 கோடியே 30 லட்சம் 
மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
 இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனை போக்குவதற்கான வழிமுறை மற்றும் ஆலோசனைகளையும் வழங்குமாறு இணையத்தளம் மூலமாக பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
2011–2012–ம் ஆண்டில் ஆண்டு வருமானத்தில்
 கிராமப்புற பகுதியில் 6.9 சதவீதமும், நகர்ப்புற பகுதியில் 5.5 சதவீதம் மருத்துவத்துக்காக செலவிடப்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதில் பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்கு,
 சர்வதேச அளவில் புதிய சுகாதார திட்டம் ஒன்றை வகுத்து அமல்படுத்த வேண்டும் என்றும் தேசிய அளவில் புதிய சுகாதார கொள்கை திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்றும் தேசிய சுகாதார அமைப்பு திட்டக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment