Search This Blog n

03 January 2015

பரவும் பன்றிக்காய்ச்சல்: 15 பேர் பலி பலருக்கு சிகிச்சை!!!

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானாவில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அம்மாநிலங்களில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்,மேலும் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.பன்றி காய்ச்சல் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால் நோய் முற்றிய நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
ஆந்திராவை விட தெலுங்கானாவில் தான் அதிகம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஹைதராபாத் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதித்த 2 கர்ப்பிணி பெண்கள் பலியாகி உள்ளனர். மேலும் 35 பேர் உஸ்மானியா மருத்துவமனை மற்றும் காந்தி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 15 பேர் சிகிச்சைக்காக சேர்த்தனர். மெகப்பூப் நகர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 90 பேரில், 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான ஜுரம், இருமல், சளி, உடல் வலி, வாந்தி, பேதி ஆகிய அறிகுறி இருந்தால் உடனடியாக பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்யும்படி தெலுங்கானா அரசு சுகாதார துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும் காய்ச்சிய குடிநீர் மற்றும் சூடான உணவு பொருளை பயன்படுத்த வேண்டும். வெளியில் செல்லும் போது துணியிலான முக கவசம் அணியும் படி கேட்டுக் கொண்டு உள்ளது.
பன்றிக்காய்ச்சல் பாதிப்பு மற்றும் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு இருமாநில அரசுகளும் அறிவித்துள்ளன.
மேலும், பன்றிக்காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது , சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், பன்றிக் காய்ச்சல் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment