Search This Blog n

03 January 2015

படகில் வந்த தீவிரவாதிகளின் குடும்பத்துக்கு தலா ரூ-.5 லட்சம்!!

 இந்தியா !! பாகிஸ்தான் தீவிரவாதிகளின் உரையாடலை ஒட்டுக்கேட்ட போது, அவர்களுடைய குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்ட தகவல் கிடைத்து உள்ளது.
அரபிக்கடல் பாகிஸ்தான் படகு தென்படுவது தொடர்பாக புலனாய்வு பிரிவு கொடுத்த தகவலை அடுத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் விமானம், 31–ந் தேதி நள்ளிரவில் அங்கு படகு ஒன்று சென்று கொண்டிருந்ததை கண்டுபிடித்தது.

கடலோர காவல் படையின் டோர்னியர் விமானம் பாகிஸ்தான்-குஜராத் பகுதியை ஒட்டிய அரபிக்கடல் பகுதிக்கு விரைந்து ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. அந்த விமானம் படகை கண்டு பிடித்ததும், கடலோர காவல் படை கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன்பேரில் கடலோர காவல்படை கப்பல் அந்த பகுதிக்கு விரைந்தது. படகை கண்டு பிடித்ததும் அதை விரட்டிச் சென்று மடக்கியது.
குஜராத் மாநிலத்தில் உள்ள போர்ப்பந்தர் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 365 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் அந்த படகு வந்தபோது படகில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காகவும், அதில் இருந்தவர்களை விசாரிப்பதற்காகவும் படகை நிறுத்துமாறு கடலோர காவல்படை கப்பல் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் படகில் இருந்தவர்கள் அதை பொருட்படுத்தாமல், இந்திய பகுதியில் இருந்து பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் தப்பிச் செல்வதற்காக படகை வேகமாக செலுத்தினார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment