Search This Blog n

30 January 2015

இந்து மதத்திற்கு 100 பழங்குடி கிறிஸ்தவர்கள் மீண்டும் மாற்றம்

மேற்கு வங்காள மாநிலம்   பிர்பூம் மாவட்டம் ராம்புர்கத் பகுதியில்  கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய  100க்கும் மேற்பட்ட பழங்குடியினரை விஸ்வ இந்து பரிஷத்தினர் மீண்டும் இந்து மதததிற்கு மாற்றினர்.இந்த மறுமதமாற்ற நிகழ்ச்சியில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஜுகல் கிஷோர் கலந்து கொண்டார்,
இந்த மதமாற்றம் குறித்து கேட்ட போது விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கூறியதாவது:-
சிலர் இந்து மதத்திற்கு மாற வேண்டும் என விரும்பினால் நாம் அதை எப்படி தடுத்து நிறுத்த முடியும். நாங்கள் பலவேறு உதவிகளை அறிவித்து வருகிறோம். ஓவ்வொரு இந்து குடும்பங்களுக்கும் வேலை வாய்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறோம்.
என்று கூறினார்.
பேரணியில் உரையாற்றிய தொகாடியா கூறும் போது  வங்காளதேசத்தில் இருந்து முஸ்லீம்கள் சட்டவிரோதமாக இங்கு குடியேறுகின்றனர் இதற்கு மாநில அரசு ஒரு கால வரையறையற்ற திட்டத்தை தீட்ட வேண்டும். இல்லையென்றால் விரைவில் மேற்குவங்காளம் வங்காள தேசமாக மாறி விடும்.என்று கூறினார்.
பழங்குடி கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்துவாக மதம் மற்றம் செய்யபட்டது குறித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இந்த மத மாற்றம் வலுக்கட்டாயமாக நடந்தது என்றால்  நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என கூறி உள்ளது. 
திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் டெரக் ஒ’பிரன் தனது டுவிட்டரில் கூறி உள்ளதாவது:-
வற்புறுத்தி இந்த மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்றால், இந்த பிரச்சினை வலுவான முறையில் தீர்க்கப்படும் சாத்தியம் உள்ளது. என கூறி உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment