Search This Blog n

25 January 2015

ஆப்கானித்தானுக்கு உதவ அமெரிக்கா இந்தியா முடிவு ??

 அடுத்த தலைமுறைக்கு மாசற்ற உலகம் -குடியரசு தின விழாவில் பங்கேற்றதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலக அமைதி, வளத்துக்கு அமெரிக்க ஒத்துழைப்பு அவசியம் என்றும் மோடி பேசினார். வர்த்தக ரீதியிலான ஒத்துழைப்புக்கு இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மோடி கூறினார். ராணுவத்துக்கு தேவையான நவீன கருவிகளை தயாரிக்க கொள்ளை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இருதரப்பு பேச்சுவார்தை குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் சமூக பாதுகாப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மோடி தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா இடையே புதிய ரீதியிலான உறவு தொடங்க உள்ளதாகவும் மோடி தெரிவித்தார். தனக்கும் ஒபாமாவுக்கும் நேரடி தொலைபேசி வசதி ஏற்படுத்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். வர்த்தக ரீரியிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் மோடி விளக்கமளித்தார்.
ஆப்கானித்தானுக்கு உதவ அமெரிக்கா, 
இந்தியா முடிவு செய்துள்ளதாக பராக் ஒபாமா கூறினார். அணுசக்தித்துறையில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு பற்றி ஒபாமா விளக்கமளித்தார். பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக ஒபாமா தெரிவித்தார். சூரிய ஒளி மின்சார உற்பத்தித் துறையில் இந்தியாவை அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் ஒபாமா நம்பிக்கை தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். இதில் அவர் உரக வெப்பமயமாதல் காரணமாக அனைத்து நாடுகளுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். ஒபாமாவுக்கும், தமக்கும் வெளிப்படையாக பேச்சு நடைபெற்றதாகவும் மோடி தெரிவித்தார். மோடிக்கும் தமக்கும் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக ஒபாமா கூறினார். அடுத்த தலைமுறைக்கு மாசற்ற உலகத்தை உருவாக்க இந்தியா விரும்புகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment