Search This Blog n

21 January 2016

பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோகும் படி கூறிய பஞ்சாயத்து?

மகாராஸ்டிரா மாநிலத்தில் கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை, தங்கள் பாலியல் தேவைக்கு ஒத்துப் போகும்படி சாதி பஞ்சாயத்து தலைவர்கள் மிரட்டுவதாக தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
மகாராஸ்டிரா மாநிலம் பார்பானி மாவட்டத்தில் உள்ள சேலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தீபக் போர்.
கோந்தாலி சமூகத்தைச் சேர்ந்த இவர் தங்கள் “சாதி சங்கம பஞ்சாஸ்” என்ற பஞ்சாயத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.
அவர் இது வரை பஞ்சாயத்திற்கு ரூ.2.5 லட்சம் கட்டி உள்ளார். தற்போது அவரது சாதி சங்கம் ரூ. 6 லட்சத்தை உடனே திருப்பிக் கொடுக்கும்படி கேட்டு கொண்டது.
ஆனால் அந்த பணத்தை உடனே திருப்பிக் கொடுக்க முடியாது என்றும், அதற்கு கால அவகாசம் தேவை என்று தீபக்கும் அவரது மனைவியும் கூறியுள்ளனர். இதனால், அந்த பஞ்சாயத்து அவர்களை 
ஒதுக்கி வைத்தது.
இது குறித்து தீபக்கின் உறவினர் ஒருவர் கூறுகையில், “சாதி பஞ்சாயத்து தீபக்கின் வீட்டிற்குள் வலுகட்டாயமாக நுழைந்து அவரது மனைவியிடம் தவறாக நடந்துள்ளனர்.
அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி எறிந்துள்ளனர். அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தற்கு அடையாளமாக அவரது வீட்டின் கதவில் செருப்புகளை கட்டி வைத்தனர்.
இதனால், அந்த தம்பதியினர் நாசிக்கிற்குத் தப்பி ஓடினர். மேலும் சமூதாய உத்தரவை புறக்கணித்து அவரது உறவினர் யாரும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்று சாதி பஞ்சாயத்து எங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தீபக்கின் மனைவி சாதி பஞ்சாயத்து தலைவர்கள் அவர்களின் பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோவதாக இருந்தால் அவரது கணவர் கொடுக்க வேண்டிய ரூ. 6 லட்சத்தை கட்டவேண்டாம் 
என்று கூறி
 மிரட்டுவதாக கூறியுள்ளார்.  இது குறித்து விசாரணை நடத்த காவல்துறையினர் முன்வரவில்லை என்று கூறப்படுவது
 குறிப்பிடத்தக்கது..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment