Search This Blog n

20 June 2016

அமெரிக்க செனட் பாகிஸ்தானுக்கு நிதிஉதவி வழங்க அனுமதி

இந்தியாவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் மசோதாவை நிராகரித்த அமெரிக்க செனட் பாகிஸ்தானுக்கு நிதிஉதவி வழங்க அனுமதி
அமெரிக்காவின் மாபெரும் ராணுவ கூட்டாளி என்று இந்தியாவை அங்கீகரிக்க மறுத்துவிட்ட அமெரிக்க செனட் பாகிஸ்தானுக்கு நிதிஉதவி வழங்க அனுமதி வழங்கிஉள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற போது அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட இரு நாடுகளின் கூட்டறிக்கையில், இந்தியாவை அமெரிக்காவின் ‘மாபெரும் ராணுவ கூட்டாளி’ என்று அமெரிக்கா அங்கீகரித்து இருந்தது. இதன்மூலம், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு கிடைத்து வரும் பாதுகாப்பு தொடர்பான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள், இந்தியாவுக்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, இந்த அந்தஸ்தை அமெரிக்க செனட் சபை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதுதொடர்பாக, செனட் சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘தேசிய பாதுகாப்பு அதிகாரம் அளித்தல்’ சட்டத்தில், இந்தியாவை அமெரிக்காவின் மாபெரும் ராணுவ கூட்டாளியாக அங்கீகரிக்கும் முக்கிய திருத்தத்தை குடியரசு கட்சி செனட் உறுப்பினர் ஜான் மெக்கைன் தாக்கல் செய்தார். ஆனால், அந்த திருத்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால், இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட அந்தஸ்தை அமெரிக்க செனட் அங்கீகரிக்காத நிலை ஏற்பட்டது. அதே சமயத்தில், இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக செனட் உறுப்பினர்கள் ஜான் சுல்லிவன் தாக்கல் செய்த திருத்தம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானுக்கு நிதிஉதவி
இந்தியாவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் மசோதாவை நிராகரித்துவிட்ட அமெரிக்க செனட் பாகிஸ்தானுக்கு நிதிஉதவி வழங்க அனுமதி வழங்கிஉள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு விரிவாக்க அங்கீகாரம் என்று பாகிஸ்தானுக்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியாக வழங்க அமெரிக்க செனட் அனுமதி வழங்கிஉள்ளது என்று பாகிஸ்தானின் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment