Search This Blog n

11 November 2015

கொடுப்பதோ வெறும் ரூ.1.5 கோடி… பெப்சி சம்பாதிப்பதோ ரூ.1000 கோடி!’

தாமிரபரணியில் ஒரு வருடத்துக்கு 55 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க உள்ள பெப்சி நிறுவனம், இதற்காக அரசுக்கு வெறும் 1.5 கோடி ரூபாய் செலுத்தப்போகிறது என்றும், ஆனால் பெப்சி சம்பாதிக்க போவது மட்டும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் என்றும் தமிழக ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கடல் நீரை நன்நீராக்கும் திட்டம் மூலம் ஒரு டிஎம்சி தண்ணீரை தயாரிக்க நமக்கு ஆகும் செலவு 150 கோடி ரூபாய். தமிழகத்தின் பாசனத்துக்கு மட்டும் நமக்கு கிட்டத்தட்ட 
ஒரு வருடத்துக்கு 
500 டிஎம்சி தண்ணீர் தேவை, மற்ற தேவைகளோடு சேர்த்து நமக்கு 600 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். அதை கடல் நீர் திட்டம் மூலம் நாம் பெற 75000 கோடி ரூபாய் செலவாகும். அதற்கான ஆலைகள் அமைக்க நமக்கு கிட்டத்தட்ட ஏழரை லட்சம் கோடி செலவாகும்.
டாஸ்மாக்கின் ஒரு வருட வருமானம் 35000 கோடி. அந்த பணத்தை கொண்டு தமிழகத்தின் அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரி இருந்தால் இந்தியாவின் செழிப்பான மாநிலமாக தமிழ்நாடு வெறும் ஐந்தே வருடங்களில் மாறிவிடும். எவன் கேட்டான் உங்களை 50000 கோடி 
செலவில் மெட்ரோ ரயில் திட்டம்? குடிக்க நீர் இல்லாமல் இங்கே பலர் செத்து மடிகிறார்கள், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஏழை மக்களின் உயிர் முக்கியமா… இல்லை உல்லாச மெட்ரோ 
ரயில் முக்கியமா?
தாமிரபரணியில் பெப்சி ஒரு வருடத்துக்கு 55 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க போகிறது. இந்த தண்ணீருக்காக பெப்சி,  அரசுக்கு செலுத்த போவது வெறும் 1.5 கோடி ரூபாய். ஒரு லிட்டர் குடி தண்ணீர் 20 ரூபாய்க்கு விற்றால் அந்த கம்பெனி சம்பாதிக்க போவது மட்டும் 1000 கோடி ரூபாய்க்கு மேல். அடுத்த 99 ஆண்டுகளுக்கும் வெறும் 20 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீரை விற்றால் கூட அந்த கம்பெனி சம்பாதிக்க போவது மட்டும் 
ஒரு லட்சம் கோடி.
அதே சமயம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 55 கோடி லிட்டர் தண்ணீரை  தயாரிக்க அரசுக்கு ஆகும் செலவு மட்டும் 3 கோடி. மூன்று கோடி ரூபாய் நீரை வெறும் 1.5 கோடிக்கு விற்கும் இந்த ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு எப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட 
வேண்டும்? 
நாம் குடிக்க புதிது புதிதாக கடல் நீர் குடிநீர் ஆக்கும் திட்டம். ஆனால் பெப்சிக்கு சுவையான தாமிரபரணி தண்ணீர். ஏன் பெப்சியை ஒரு கடல் நீரை  குடிநீராக்கும் ஆலையை நிறுவ சொல்லி, அதிலிருந்து அவர்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்ள சொல்லி
 இருக்கலாமே!
ஜெயலலிதாவுக்குதான் என்ன ஒரு தாராள மனம். அரசிடம் ஒரு லிட்டர் தண்ணீரை வெறும் 3 பைசாவுக்கு வாங்கி நம் மக்களுக்கு 20 ரூபாய்க்கு விற்கிறது அந்த கம்பெனி. இப்படி தனியார் கொள்ளைக்கு உடன்படும் அரசியல்வாதிகளை விரட்ட வேண்டும். தேசத் துரோக சட்டத்தின்
 கீழ் கைது
 செய்யப்பட வேண்டியது டாஸ்மாக்கை எதிர்த்து பாடல் பாடிய கோவனையா அல்லது இப்படி சொந்த நாட்டை கூறு போட்டு விற்கும் துரோகிகளையா?” என்று தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment