Search This Blog n

12 December 2016

பேரிரைச்சல்.. கொட்டும் மழை.. வர்தா புயலின் ருத்ர தாண்டவம்

ஓ..வென்ற இரைச்சலுடன் பயங்கர காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. 
காலை 11.30 மணியளவில் . கடுமையான காற்றுடன், மழையும் பெய்வதை  காற்றின் வேகமானது ஓ... என்ற பேரிரைச்சலாக வெளிப்படுவதை உங்களால் கேட்கவும் முடியும். இந்த இரைச்சல், தென்னை மரம் சாயும் அளவுக்கான பலம் கொண்ட காற்று, மழை என பல முனை தாக்குதலுக்கு
 உள்ளாகியுள்ளது சென்னை.
பொதுமக்கள் அனைவருமே வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
வர்தா புயல் தற்போது சென்னை அருகே கரையை கடந்து வருகிறது. இந்த புயல் மழையால் சென்னை மாநகரம் இருளில் 
மூழ்கியுள்ளது.
இதுவரை, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 4000 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 163 மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடலோர பகுதி மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த புயல் கரையை கடக்க சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment