Search This Blog n

07 December 2016

முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி பயணம் எம்.ஜி.ஆர் சமாதி அருகே நல்லடக்கம்

தொடர்ந்து வாலாஜா சாலை,சிதம்பரம் ஸ்டேடியம்,சென்னை பலகலைகழகம் வழியாக சென்ற முதல்வரின் இறுதி ஊர்வலம் எம்ஜிஆர் சமாதியை அடைந்தது.

இறுதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட முதல்வரின் உடல் முப்படை வீரகளால் மரியாதையுடன் குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டு சந்தன பேழையில் வைக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் உடலுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மலர் வளையம் வைத்தார். அவரை தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் பன்னீர்செல்வம்,மாநிலங்களவை து.தலைவர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால்,தலைமை செயலாளர் ராம் மோகன ராவ்,முன்னாள் ஆளுநர் ரோசய்யா, ராகுல் காந்தி,குலாப் நபி ஆசாத், திருநாவுக்கரசர், நடராஜன், பின்னர் தளபதிகள் ராணுவ முறைப்படி 
மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் அவரது உடலில் இருந்த கொடியை முப்படை வீரர்கள் ராணுவ முறைப்படி அகற்றினர். பின்னர் சசிகலா, மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இருவரும் ஜெயலலிதா உடலை 
சுற்றி வந்தனர்.
ஜெயலலிதாவின் வழக்கமான அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபெறும் அவரது ஆஸ்தான ப்ரோகிதர் தேவாதி மந்திரங்கள் சொல்ல அதை பின்பற்றி சசிகலாவும் தீபக்கும் கடமைகளை செய்தனர்
அவரது சவப்பெட்டிக்குள் சிறி சிறு சந்தனகட்டைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்தனர். பின்னர் அவரது உடல் வைக்கப்பட்ட சந்தன பெட்டியை மூடும் பணி நடைபெற்றது. அவரது பெட்டியை மூடுவதற்கு கடைசி சில நொடிகளுக்கு முன்பு முதல்வருடன் எப்போதும் பாதுகாப்பு பணியில் உடன் இருக்கும் ஏசி பெருமாள்சாமி உள்ளிட்ட காவலர்கள் கடைசியாக அவாரது முகத்தை உருக்கமுடன் 
பார்த்தனர்.
பின்னர் சந்தன பேழை மூடப்பட்டது. வீரர்கள் மரியாதையுடன் அவரது உடல் அதங்கிய சந்தனபெட்டியை அதற்கென தோண்டப்பட்ட குழிக்குள் இறக்கி வைத்தனர்
பின்னர் அனைவரும் அவரது உடல் வைக்கப்பட்ட சவக்குழிக்குள் ரோஜாப்பூக்களையும் பாலையும் ஊற்றினர். உப்பை தூவினர். முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அவரது உடல் வைக்கப்பட்ட சவகுளிக்குள் பால் ஊற்றினர்.
பின்னர் அந்த குழி மூடப்பட்டது. இந்த நிகழ்வில் லட்சகணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

Post a Comment