Search This Blog n

19 July 2015

விருப்பம் இன்றி மனைவியுடன் உறவு கொண்டால் கணவன் மீது வழக்கு

மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் பாலுறவு கொண்டால், அதை பலாத்காரமாகவே கருத வேண்டும் என்று பாம் ராஜ்புத் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. செய்துள்ளது. இதுகுறித்து அத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில்,
திருமண பந்தத்தி்ற்குள் நடைபெறும் அத்துமீறிய உறவும் ஏற்கத்தக்கது கிடையாது. கணவன் தனது செக்ஸ் ஆசையை தணித்துக்கொள்ள கட்டாயப்படுத்தி உறவு கொள்வது மட்டுமின்றி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, செக்ஸ் கருவியாக மனைவியை 
பயன்படுத்திக்கொள்ளும் போக்கும் உள்ளது. அதுபோன்ற நேரங்களில் அதை சீரியசாக கருத்தில்கொள்ள வேண்டியது அரசின் கடமை என்றார். மகளிர் அமைப்புகள் மேனாகா காந்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம், நடைபெற்ற 
நாடாளுமன்ற கூட்டத்தில், மாநிலங்கள் அவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி "திருமணத்திற்குள்ளான பலாத்காரம் (marital rape) என்ற வார்த்தை, சர்வதேச அளவில் புரிந்துகொள்ளப்படும் விதத்துக்கும், நமது நாட்டில் புரிந்துகொள்ளப்படும் விதத்துக்கும் வேறுபாடு உள்ளது. 
இந்தியாவில் இதுபோன்ற வார்த்தை பொருந்தாது.  ஏன் என்றால் இங்கு   திருமணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம், மதம்சார்ந்த நம்பிக்கைகள், சமூக பொருளாதார நிலை, கல்வி நிலை போன்ற பல காரணங்களால், இந்தியாவுக்கு அந்த வார்த்தை பொருந்தாது" என்று கூறியிருந்தார். இந்நிலையில் அதற்கு மாறுபட்ட கருத்தை மேனகா காந்தி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment