Search This Blog n

20 February 2016

கச்சதீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு புறப்பட்ட இந்திய பக்தர்கள்!

அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்பதற்காக, இந்திய பக்தர்கள் இன்று காலை படகுகள் மூலம் கச்சத்தீவு புறப்பட்டனர்.
இலங்கையில் புலிகளுடனான போர், கடந்த 2009-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு முதல் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு இந்திய பக்தர்களை, இலங்கை அரசு அனுமதித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா, இன்று மாலை கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, இந்தியாவை சேர்ந்த 3,477 பக்தர்கள் இன்று கச்சத்தீவு 
புறப்பட்டனர்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து இன்று காலை முதல் திரண்ட பக்தர்கள் கடற்படை, சுங்கத்துறை மற்றும் போலீசாரின் சோதனைக்கு பின் படகுகளில் கச்சத்தீவு செல்ல
 அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 92 படகுகளில் கச்சத்தீவு செல்லும் பக்தர்கள் இன்று மாலை அங்கு நடைபெறும் கொடியேற்றம், சிலுவை பாதை மற்றும் சிறப்பு திருப்பலிகளில் பங்கேற்கின்றனர்.
இதேபோல், இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கின்றனர். நாளை காலை அந்தோணியார் கோவிலில் நடைபெறும் திருவிழா திருப்பலி முடிந்த பின்பு இந்திய பக்தர்கள் ராமேஸ்வரம் 
திரும்புவார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment