Search This Blog n

03 December 2015

மழையால் இந்திய இலங்கை விமானங்கள் இரத்து

கொழும்பிற்கும் – சென்னைக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் இன்று வியாழக்கிழமையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் 
அறிவித்துள்ளது.
சென்னையில் நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலையால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும்மழை காரணமாக தமிழகத்தின் சென்னை சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகள் சிரமங்களை 
எதிர்நோக்கியுள்ளனர்.
கொழும்பில் இருந்து சென்ற விமானங்கள் சில சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு திரும்பியுள்ளன.
விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் நிலைமைகளை மீளாய்வு செய்ததன் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திட்டமிடப்படும் என விமான நிலைய இயக்குனர் 
கூறியுள்ளார்.
விமானத்தின் ஒடுபாதையில் வெள்ளம் தேங்கியிருப்பதாலும் மழை காரணமாக ஓடுபாதையை சரியாக கண்டறிவதில் சிரமம் காணப்படுவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் 
குறிப்பிடுகின்றனர்.
கொழும்பிற்கும் – சென்னைக்கும் இடையிலான அனைத்து விமான நேற்றைய தினமும் இரத்து செய்யப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment