Search This Blog n

10 October 2012

சுற்றுலா சென்ற இளம்பெண் மரணம்: (வீடியோ இணைப்பு)

புதன்கிழமை, 10 ஒக்ரோபர் 2012,பொலிசார் தீவிர விசாரணை சுவிட்சர்லாந்தில் சுற்றுலா சென்ற 23 வயது ஜேர்மானிய இளம்பெண்ணும் அவரது சுற்றுலாக் குழுவின் வழிகாட்டியுமான 24 வயது பெல்ஜிய இளைஞரும் நீரில் மூழ்கி பலியாகினர். செயிண்ட் கேலன்(Saint Gallen) மாநிலத்தில் ஆம்டெனுக்கு(Amden) அருகில் பாயும் ஃபேலன்பேக் நதி(Fallenbach River) மலையிலிருந்து அதி வேகமாக வழிந்தோடும்.
இந்த வேக நீரில் பயணிக்க விரும்பி இரண்டு குழுக்கள் அப்பகுதிக்கு வந்திருந்தன. இறந்துபோன இருவரும் இந்த இரு குழுக்களைச் சேர்ந்தவர்களாவர்.
பிற்பகலில் திடீரென்று பெருமழை பெய்ததால் நதியின் நீர்மட்டம் பெருகியது. நதியின் வேகமும் அதிகரித்தது. ஒரு குழு நீரின் வேகத்துக்கு பலியாகாமல் எவ்விதக் காயமுமின்றி சமாளித்து வெளியே வந்துவிட்டது.
நீர் வேகமாக வந்து விழும் இடத்தில் இந்த இரண்டு, இளைஞர்களும் சிக்கிக் கொண்டதால் நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல் உயிரிழந்தனர். இந்த ஏரி, செயிண்ட் கேலன்(Saint Gallen) மற்றும் கிளாரஸ்(Glarus) மாநிலங்களுக்கு இடையில், கடல் போல் பரந்து விரிந்து காணப்படுகிறது.
சுவிஸ் ஆல்பைன்(SAC) சங்கத்திலிருந்து 60 பேரும் உள்ளூர் தீயணைப்புப் படையும் மாநிலக் காவல்துறையினரும் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் ஆல்பைன் சங்கத்தினர் இரவு பதினோரு மணிக்கு இரண்டு உடல்களையும் கண்டுபிடித்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பின்பு இருவரின் மரணத்துக்கான உண்மைக் காரணங்கள் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

Post a Comment