Search This Blog n

08 October 2012

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி அச்சத்தில் மக்கள்

திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தீவுகளில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவான இந் நிலநடுக்கத்தினால் கடலோர கிராமங்களில் கடும் பீதி ஏற்பட்டது.
அம்பான் நகரிலிருந்து தென்கிழக்கில் 100 மைல் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 21.6 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி ஏற்படாது என்று இந்தோனேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மெக்சிகோ கடற்கரையில் உள்ள கலிபோர்னியா வளைகுடாவிலும் இன்று காலையில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

Post a Comment