Search This Blog n

02 November 2013

இன்று முதல் புதிய ஐபோன் மாடல்கள் இந்தியாவில் விற்பனை


 ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூப்பர்டினோவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனமாகும்.

நுகர்வோர் மின்னணு, கணினி மென்பொருள், தனிப்பட்ட கணினிகள் மற்றும் வடிவமைப்புகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

அதுமட்டுமின்றி இப்போது தங்களின் தயாரிப்பான ஐ-போன்களின் புதிய மாடல்களை இன்று விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
தீபாவளிக்கு முதல் நாளான இன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த போன்கள் '5 எஸ்' மற்றும் '5 சி' என்ற இரண்டு ரகங்களில் வெளியாகி உள்ளன. இந்த விற்பனை குறித்து ஆப்பிள் நிறுவனம் இரண்டு வாரங்கள் முன்பே அறிவித்திருந்தது.

இவற்றில் கோல்டு, சில்வர் மற்றும் சாம்பல் நிறத்தில் வெளியாகியுள்ள '5எஸ்' ரகங்களில் '16 ஜிபி' மாடல் 53,500-க்கும், '32ஜிபி' மாடல் 62,500-க்கும், '64ஜிபி' மாடல் 71,500-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. நீலம், பச்சை, ரோஸ், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் வெளியாகியுள்ள '5சி' ரகங்களில் '16ஜிபி' மாடல் 41,900-க்கும், '32ஜிபி' மாடல் 53,500-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளும், தொழில் நுட்ப உத்திகளும் இவற்றின் விற்பனையை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
 

0 கருத்துகள்:

Post a Comment