Search This Blog n

27 September 2012

உலக வெப்பமயமாதலின் எதிரொலி: 10 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் அபாயம்

27.09.2012.By.Rajah.உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், 2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இறக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 2010 மற்றும் 2030ஆம் ஆண்டில் வானிலை மாற்றத்தால் மனித இனம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாரா என்ற மனித இன நலம் சார்ந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வாயுக்கள் அதிகளவில் வெளியிடப்படுவதால், உலகில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, துருவப் பகுதிகளிலும் பனி உருகுகிறது.
இதனால் வறட்சி, கடல் நீர் மட்டம் உயர்தல் போன்ற அபாயங்கள் ஏற்படும். தற்போது காற்று மாசு, பசி, நோய் போன்றவற்றால் 50 லட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.
பெட்ரோலியப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் 2030ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60 லட்சமாக உயரும்.
இவர்களில் 90% பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அடுத்த 10 ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 10 கோடி பேர் உயிரிழக்கக்கூடும்.
தொழிற்துறைகள் வளர்வதற்கு முன்பு இருந்ததை விட இப்போது 0.8 சதவீதம் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு கேன்கன் சுற்றுச்சூழல் மாநாட்டின் போது, உலக வெப்பத்தை 2 சென்டிகிரேட் வரை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புக்கொண்டன.
ஆனால், மாசு ஏற்படுத்தும் வாயுக்கள் அளவைப் பார்த்தால் 2 சென்டிகிரேட் வெப்பத்தை குறைப்பது கூட போதுமானதாக இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

0 கருத்துகள்:

Post a Comment