Search This Blog n

22 September 2012

முகத்திரையை அகற்ற சொன்னதால் ஆத்திரம்: பொலிசை கடித்த பெண்

 சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2012,
By.Rajah.பிரான்சில் முகத்திரையை அகற்றச் சொன்ன பெண் பொலிசைக் கடித்த முஸ்லிம் பெண்ணுக்கு, இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிரான்சில் மெர்செல் நகரைச் சேர்ந்தவர் லூயி மேரி சூசி(வயது 18). முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர், ஜூலை மாதம் கறுப்பு அங்கியால் உடல் முழுவதையும் மறைத்தபடி மசூதிக்கு செல்ல முயன்றார். பிரான்ஸ் சட்டப்படி உடல் மற்றும் முகத்தை மூடியபடி பொது இடத்தில் செல்வது குற்றம்.
எனவே இரண்டு பெண் பொலிசார் லூயியை வழிமறித்து அவரது அடையாள அட்டை மற்றும் ஆவணங்களைக் காட்டும்படி கூறினர், முகத்திரையையும் அகற்றும்படி உத்தரவிட்டனர்.
அவர்கள் சொன்னதை கேட்காமல் லூயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், கோபத்தின் உச்சிக்குச் சென்ற லூயி, பெண் பொலிஸ் ஒருவரை திடீரென கடித்து விட்டார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பொலிசை கடித்ததை ஒப்புக் கொண்டார் லூயி. இதையடுத்து அவருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

0 கருத்துகள்:

Post a Comment