Search This Blog n

17 September 2012

டி20 உலகக் கிண்ணத்தை வெல்வது யார்?

17.09.2012.By.Rajah.டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இம்முறை இலங்கையில் நடைபெற உள்ளது. நான்காவது முறையாக நடத்தப்படும் இப்போட்டியில் 12 நாடுகள் பங்கேற்கின்றன. நாளை மறுநாள் தொடங்கி ஒக்டோபர் 7ம் திகதி முடியவுள்ள இத்தொடரின் கிண்ணத்தை வெல்வதற்கு அனைத்து நாடுகளும் ஆர்வத்தில் உள்ளன.
அனைத்து அணிகளும் இலங்கையை வந்தடைந்துள்ளன. நாடுகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இதுவரை நடந்து முடிந்த 3 டி20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி 2007ம் ஆண்டில் முதல் கிண்ணத்தை வென்றது. 2009ம் ஆண்டு பாகிஸ்தான் அணி கிண்ணத்தை வென்றது. 2010ம் ஆண்டில் இங்கிலாந்து அணி கிண்ணத்தை வென்று தற்போது நடப்பு சாம்பியனாக உள்ளது.
இத்தொடரில் 12 அணிகளில் ஆறு அணிகள் முக்கியமான அணிகளாக உள்ளன.
சாம்பியனான இங்கிலாந்து அணி, சக்தி வாய்ந்த மேற்கிந்திய தீவுகள், அசைக்க முடியாத சக்தியாக தென் ஆப்ரிக்க அணிகள் மற்றும் ஆசியாவின் முதல் மூன்று அணிகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் ஆகியவை ஆகும்.
பங்கேற்கும் அணிகள் மற்றும் அணித்தலைவர்கள்:
ஜிம்பாப்வே (பிரெண்டன் டெய்லர்), தென் ஆப்ரிக்கா (டிவில்லியர்ஸ்), பாகிஸ்தான் (மொஹமது ஹபிஸ்), இந்தியா (மஹேந்திர சிங் டோனி), அவுஸ்திரேலியா (ஜார்ஜ் பெய்லி), இலங்கை (மஹேல ஜெயவர்த்தன), மேற்கிந்திய தீவுகள் (டேரன் சம்மி), அயர்லாந்து (போர்டர்பீல்டு), வங்கதேசம் (முஷ்பிகுர் ரஹிம்), நியூசிலாந்து (ராஸ் டெய்லர்), ஆப்கானிஸ்தான் (நவ்ரோஸ் மங்கள்)

0 கருத்துகள்:

Post a Comment