Search This Blog n

18 September 2012

அமெரிக்க தூதரகங்களை தொடர்ந்து தாக்குவோம்: அல்கொய்தா கடும் எச்சரிக்கை

By.Rajah.அரபு நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும் உலகின் பிற நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரங்களை தொடர்ந்து தாக்குவோம் என அல்கொய்தா அறிவித்துள்ளது. இஸ்ரேலிய அமெரிக்கர் ஒருவர் எடுத்த படத்தால் இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது அமெரிக்கா.
நபிகள் நாயகத்தையும், இஸ்லாமையும் கடுமையாக விமர்சித்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தால் உலக நாடுகள் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. லிபியாவில் அமெரிக்க தூதர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தாக்குதல் தொடரும் என்று அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் அரபுப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கையில், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களைத் தாக்குவோம். ஒரு தூதரகத்தையும் விட மாட்டோம்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இதைச் செய்யவேண்டும், செய்வார்கள் என்று அது எச்சரித்துள்ளது.
இதையடுத்து உலக நாடுகளில் உள்ள தனது தூதரங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே முன்னெச்சரிக்கையாக சூடான், துனிஷியா நாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் பணியாற்றி வரும் முக்கியத்துவம் உள்ள ஊழியர்களை அமெரிக்கா திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அரசு

0 கருத்துகள்:

Post a Comment