Search This Blog n

19 September 2012

முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரத்தை நேரில் பார்வையிட்டது ஐ.நா. குழு; மக்களின் மீள்குடியமர்வு குறித்தும் ஆராய்வு

19.09.2012.By.Rajah.வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளான முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளுக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர் ஐ.நா. குழுவினர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மீளக்குடியமர்வு, கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்தும் கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதி முன்னிலையில் அரச அதிபரிடம் அவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.
ஒருவாரகாலம் பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா. உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு வட அமெரிக்க பிரிவுக்குப் பொறுப்பான ஹன்னி மெஹாலி மற்றும் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத் தெரிவுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சோலர்ஸ் அடங்கிய 4 பேர் கொண்ட குழு கிளிநொச்சி மாவட்டத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை தனது பயணத்தை மேற் கொண்டிருந்தது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்குச் சென்ற ஐ.நா அதிகாரிகள் அங்கு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்லரன், மற்றும் இராணுவத் தளபதி மேஜர் உதய பெரேராவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது போரின் பின்னர் அபிவிருத்தி நடவடிக்கைகள், மக்களின் மீளக்குடியமர்வு நவடிக்கைகள், கண்ணி வெடி அகற்றல் செயற்பாடுகள் தொடர்பிலும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியள்ளதா என்பது தொடர்பிலும் கலந்துரையாடியதாக சந்திப்பின் முடிவில் அரச அதிபர் தெரிவித்தார்.
மேலும் தற்போதைய நிலைமை தொடரிபில் அவர்கள் திரும்பி கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார். இதன் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைகளையும், கனகராயன் குளத்திலுள்ள "திவிநெகும' வேலைத்திட்ட கிராமத்தையும் பார்வியிட்டனர்.
தொடர்ந்து போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளையும் நேரடியாகக் சென்று பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

Post a Comment