Search This Blog n

24 June 2013

உத்தரகாண்டில் மீண்டும் தொடர் மழை: மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டது

 இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதுடன்  நாளை முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

அங்கு மீண்டும் தொடரும் மழை காரணமாக கருமேக மூட்டமாக உள்ளது. இதனால் ஹெலிகாப்டர்கள் மூலம் நடந்து வந்த மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கேதர்நாத்தில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதனால் வெண் புகை சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக இன்று கேதர்நாத்துக்கு ஒரு ஹெலிகாப்டர் கூட செல்லவில்லை. நாளை பலத்த மழை தொடங்குவதற்குள் எல்லோரையும் மீட்டு விட வேண்டும் என்று நினைத்த போதிலும் 74 ஆயிரம் பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.
இன்னும் 22 ஆயிரம் பேர் தவித்தப்படி அங்கு உள்ளனர். கேதர்நாத்தில் மட்டும் இன்னும் 500 பேர் மீட்கப்படாமல் உள்ளனர்.
இதற்கிடையே மலைப் பகுதிகளில் வேறு எங்காவது மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை ஆள் இல்லா குட்டி விமானத்தை அனுப்பி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 25, 26, 27-ந்தேதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை இலாகா கூறியுள்ளதால் உத்தரகாண்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு பேரழிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

 


 

0 கருத்துகள்:

Post a Comment