Search This Blog n

02 May 2015

12 வயது சிறுமி குடும்ப தலைவியானர் ---

 
சிறுமி விளையாடும் வயதில் குடும்ப தலைவி: வறுமையின் கொடுமையில் 
 உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகேயுள்ள கிராமத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் 4 பேர் குடிசை வீட்டில் தங்கியுள்ளனர். இந்த குழந்தைகளில் மூத்த சகோதரி குடும்ப தலைவியாகியுள்ளார்.
இந்த குடிசை வீட்டில் தங்குவதற்காக இவர்கள் மாதம் தோறும் ரூ. ஆயிரம் வாடகை செலுத்த வேண்டியுள்ளது. அவர்களாகவே சமைத்து சாப்பிட்டு கொள்கின்றனர். இரண்டு வருடத்திற்கு முன்பு வறுமை காரணமாகவும், பயிர்கள் சேதமடைந்ததாலும், இவர்களது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து இந்த 4 குழந்தைகளும் உறவினர் வீட்டில் தஞ்சம் பகுந்தனர். ஆனாலும், உறவினர் வீட்டிலும் வறுமை தாண்டவமாடியதால், அவர்களாலும் இவர்களை பராமரிக்க முடியவில்லை. இதனையடுத்து அவரும் குழந்தைகளை வெளியே அனுப்பி விட்டார்.
வீடில்லாமலும், வறுமை மற்றும் பசியினால் குழந்தைகள் தவித்தனர். இந்நிலையில், இந்த குழந்தைகளில் 6 வயதான ரோகித் என்ற சிறுவன், உதவி கேட்டு போலீஸ் நிலையத்தை நாடினான். போலீசார் அந்த குழந்தைகளை அழைத்து கொண்டு கிராம பஞ்சாயத்தை அணுகி, இவர்களுக்கு உதவி செய்ய அறிவுறுத்தினர்.
இது தொடர்பாக கிராம தலைவர் கூறுகையில், இந்த குழந்தைகளுக்கு மாதம்தோறும் ஆயிரம்ரூபாய் வாடகையில் அறை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறினார். உணவுக்கும், வாடகை மற்றும் மற்ற செலவுகளுக்கு இந்த குழந்தைகள் என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க திணறிய அவர், இந்த குழந்தைகளில் மூத்த பெண் வயல்களில் வேலை செய்து சம்பாதித்து கொள்வாள் என கூறி மழுப்பினார்.
அந்த கிராமத்தில் பெற்றோரின் வயலுக்கு அருகே ஒரு அறை 4 குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனியாக இவர்கள் வசிக்க வேண்டிய போதிலும், தங்க அறை கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளதாக, குடும்ப தலைவர் பொறுப்பை ஏற்ற சோனியா கூறினார்.
மேலும் அவர், படிக்க விரும்புவதாகவும், தனது சகோதரர் மற்றும் சகோதரிகள் படிப்பதை பார்க்க விரும்புவதாகவும் கூறினார்.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, சிறுமிகள் பற்றிய நிலை தங்களுக்கு தெரியவந்துள்ளதாகவும், எங்களால் ஆன உதவியை அவர்களுக்கு செய்ய உள்ளதாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் கூறினார். மாவட்ட அதிகாரி ஒருவர் விரைவில் சென்று அச்சிறுமிகளை பார்ப்பார் 
எனவும் கூறினார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment