Search This Blog n

01 May 2015

ரூ.2 லட்சம் கோடி: அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்ய திட்டம்

நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும். இவற்றில் பாதி முதலீடு, மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிடைக்கும்,'' என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
நாடு முழுவதும், 100 இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்கவும், புதிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்திற்கும், மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் இந்த திட்டங்களுக்கு, ஒரு லட்சம் கோடி
 ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. அதேநேரத்தில், நாடு முழுவதும் உள்ள நகரங்களை மேம்படுத்த, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படலாம்.
 இவற்றில், 50 முதல், 56 சதவீத முதலீடு, மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்யப்படும். இந்த முதலீடுகள் மூலம் நகர்ப்புற வாழ்க்கை வசதியானதாக மாறும். கல்வி, 
பொழுதுபோக்கு, வேலைவாய்ப்பு, பொருளாதார வாய்ப்புகள் மற்றும் தரமான சுகாதார சேவைகள் போன்றவை நகரங்களில் கிடைப்பதால், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்
 பெயர்வது அதிகரித்து வருகிறது. அதனால், நகர வாழ்க்கையை வசதியானதாகவும், வாழ்வதற்கு ஏற்றதாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டியது அவசியம். இவ்வாறு, வெங்கையா நாயுடு கூறினார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment