Search This Blog n

02 May 2015

பாதிக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த அவமானம்

 நிலநடுக்கத்தால் காயமடைந்து தர்பங்கா மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் (டிஎம்சிஎச்) சிகிச்சை பெற்று வருபவர்களின் நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக் கிழமை சக்தி
 வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பிஹார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் காயமடைந்து, டிஎம்சிஎச் மருத்துவ மனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் நெற்றியில், அடையாளம் காண்பதற்காக ‘நிலநடுக்கம்
 என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு அந்த ஸ்டிக்கர் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுசில் குமார் மோடி கூறும்போது,
“நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் நெற்றியில் சிறைக்கைதிகள் போல ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அவர்களை அவமதிக்கும் செயல் என்றார்.
இதையடுத்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தர்பங்கா மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் வைத்யநாத் சஹானி, டிஎம்சிஎச் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.
இதன்போது இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment