Search This Blog n

14 May 2015

மடங்களில் சிஏஜி தணிக்கை: முறைகேடுகள் எதிரொலி

ஒடிஸாவில் செயல்படும் சுமார் 18,000 கோயில்கள், மடங்களின் வருவாயை முதல் முறையாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தணிக்கை செய்யவிருக்கிறார்.
 இதற்கான நடைமுறைகளை சிஏஜி அலுவலகம் தொடங்கிவிட்டதாகவும் இத்தணிக்கைப் பணிக்காக சுமார் 18,000 கோயில்கள், மடங்கள் அடங்கிய பட்டியலை ஒடிஸா அரசு தயாரித்திருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 கோயில்கள், மடங்களின் சொந்த வருமானத்துடன் அரசிடம் இருந்து பெறப்படும் நிதியுதவியும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
 இந்த கோயில்கள், மடங்களுக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதால் பெருமளவில் முறைகேடுகளும் நடந்து வருவதாக அரசுக்குப் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
 கோயில், மடங்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு கிடைத்த விலைக்கு சில நபர்கள் விற்றுவிட்டதாகவும், இன்னும் பலர் நீண்ட காலமாக கோயில்கள், மடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 
 

0 கருத்துகள்:

Post a Comment