Search This Blog n

13 September 2015

நண்பராக பேஸ்புக்கில் பழகி 200 பெண்களின் நிர்வாண படங்களை சேகரித்து பணம் பறித்த மாணவன்

ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத் (21). மலக்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 1½ வருடங்களாக ‘பேஸ் புக்’கில் பெண்கள் பெயரில் போலி பக்கங்களை தொடங்கினார். பின்னர் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பணக்கார மாணவிகளை குறிவைத்து பழகினார். பலர் இவர் ஆண் என்பது தெரியாமல் பழகினார்கள்.

அப்துல் மஜீத் பெண்களை கவரும் வகையில் பேசி அவர்களின் புகைப்படத்தை கேட்டு பெறுவார். நன்கு பழகிய பெண்களிடம் காதல் மற்றும் காம உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி அவர்களது நிர்வாண படங்களை அனுப்பும்படி கேட்பார்.

பல பெண்கள் அவர் கேட்டபடி தங்களது நிர்வாண படங்களை செல்போனில் படம் எடுத்து அனுப்பி உள்ளனர்.

நிர்வாண படங்களை அனுப்பிய மாணவிகளிடம் அந்த படங்களை காட்டி, இணைய தளத்தில் வெளியிடுவதாக கூறியும், பெற்றோருக்கு அனுப்பி விடுவதாக கூறியும் அப்துல் மஜீத் பணம் பறித்து உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் அவருக்கு பணம் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட ஜனனி என்ற மாணவி தனது தாயிடம் கூறினார். தைரியமான அவரின் தாய் ஸ்வேதா பிரபு, தனது மகள் மூலமாகவே அப்துல் மஜீத் பற்றிய விவரங்களை சாட்டிங் மூலம் சேகரித்தார்.

மேலும் அவரது மிரட்டல்களை பதிவு செய்தார். தான் சேகரித்த அனைத்து ஆதாரங்களுடன், தனது மகள் ஜனனியுடன் சைதராபாத் போலீஸ் நிலையத்துக்கு சென்று நேரில் புகார் மனு அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி அப்துல் மஜீத்தை நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் அப்துல் மஜீத் பல்வேறு பெண்கள் பெயரில் 6 போலி பேஸ்புக் தொடங்கி 200 பெண்களை மிரட்டி பணம் பறித்து உள்ளது தெரிய வந்தது. ஒரு பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சமும், இன்னொரு பெண்ணிடம் இருந்து ரூ.86 ஆயிரமும் பறித்து உள்ளார்.

அவரது செல்போனில் இருந்து பல்வேறு மாணவிகளின் 80 நிர்வாண படங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் 100–க்கும் மேற்பட்ட நிர்வாண படங்கள் பேஸ்புக்கில் பதிவு செய்து உள்ளார்.

அந்த படங்களை அப்துல் மஜீத் இணையதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி இருந்தாலும் அவை வெளியாகவில்லை என்று போலீஸ் கமிஷனர் ஆனந்த் கூறினார்.

அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் தயங்காமல் புகார் செய்யலாம் என்று கூறிய போலீசார் அதற்கான செல்போன் எண்களை வெளியிட்டு உள்ளனர். இதுவரை 80 புகார்கள் வந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment