Search This Blog n

08 September 2014

நிலநடுக்கத்தைக் கண்டறியும் கருவி அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் நில நடுக்கத்தைக் கண்டறியும் கருவி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 இல் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 850-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்தனர்.
சுனாமிக்குப் பின்னர் கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் கன்னியாகுமரியில் நிலநடுக்கத்தைக் கண்டறியும் கருவி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து நில நடுக்கம், மழையளவு, காற்றின் வேகம், வெப்பநிலை, சூரிய கதிர்வீச்சு உள்ளிட்டவைகளை கண்டறியும் தானியங்கி கருவியை அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு செய்தது.
இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில் விவேகானந்த கேந்திரம் இடத்தை தானமாக வழங்க முன்வந்தது.
இதையடுத்து கேந்திர வளாகத்தில் தானியங்கி கருவி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 10-க்கும் மேற்பட்ட பொறியியல் வல்லுநர் குழுவினர் குமரியில் முகாமிட்டுள்ளனர்

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

Post a Comment