Search This Blog n

10 December 2012

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு இறந்த நபர்: வேக வைத்துத் தின்ற ,,

ஜேர்மனியின் நீதிமன்றம் வினோத வழக்கொன்றில் குற்றவாளிக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது. தண்டனை பெற்ற 44 வயதான நபர் வேலையில்லாமல் திரிந்த போது இணையதளம் மூலமாக 37 வயது வங்கிப் பணியாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டார்.
இருவரும் ஓரினப் புணர்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
சம்பவத்தன்று வங்கி பணியாளரின் வாயையும் மூக்கையும் அவர் சம்மதத்துடன் "டேப்" வைத்து மற்றவர் ஒட்டிவிட்டார்.
உறவு கொண்டு முடிந்த பின்பு "டேப்"பை நீக்கியபோது அவர் மரணமடைந்துவிட்டது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அந்த நபர் தலை, கை, கால்களைத் தனித்தனியாக வெட்டி, துண்டுகளாக்கி வேக வைத்துச் சாப்பிட்டார்.
இதற்கிடையே பொலிசார் இவரது வீட்டிற்கு வந்து விசாரித்த போது தான், அந்த நபரை கொன்றுவிட்டதாகக் கூறினார். இவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆனால் அதற்கு முன்னர் பொலிசார் இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
இதை விசாரித்த நீதிபதி, இருவருக்கு இடையிலும் இருந்த வன்புணர்ச்சி முறை சட்டப்படி தவறு கிடையாது.
இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் அதில் ஈடுபட்டதால் கொலைக்கான உள்நோக்கம் எதுவும் கிடையாது.
எனவே, இறந்தவரை வெட்டித் தின்ற குற்றத்திற்காக மட்டும் இவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை அளிப்பதாகக் கூறினார்.
அரசு சட்டத்தரனி, கொலைக்கான உள்நோக்கத்தை நிரூபிக்க இயலாததால், ஆயுள் தண்டனையிலிருந்து குற்றவாளி தப்பித்தார்.

0 கருத்துகள்:

Post a Comment