Search This Blog n

17 December 2012

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆதம் பற்றிய சில திடுக்கிடும் ?

அமெரிக்காவில் கனெக்டி கட்டில் நியூடவுனில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்திய ஆதம் லன்ஷா எனும் இளைஞன் தனது சிறுவயதில் நற்குணங்கள் நிறைந்தவனாகவே இருந்தான் என்று அவனை பற்றி தெரிந்தவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் ஆதம் லன்ஷாவின் உறவினர் ஒருவர் கூறியபோது, ஆதம் சிறுவயது முதலே அமைதியான சிறுவனாகவே இருந்தான்.
அவனிடம் வன்முறையை நாங்கள் கண்டதில்லை, வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் உடையவன் என கூறினார்.
ஆதம் லன்ஷா 12 சிறுமிகள் 8 சிறுவர்கள் அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் மற்றும் தனது தாய் ஆகியோரைக் கொலை செய்து விட்டுத் தன்னைத் தானேயும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
இவன் பள்ளிச் சிறுவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒரு ரைஃபிள் உட்பட 3 துப்பாக்கிகளைப் பாவித்துள்ளான்.
இவை அனைத்தும் சட்டபூர்வமாக இவனின் தாயின் பெயரில் பதிவு செய்து வாங்கப்பட்டவை என்பது அதிர்ச்சியான செய்தியாகும்.
தற்போது ஆதம் லன்ஷாவின் சகோதரனும் தந்தையும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பலியான 8 வயதுக்கும் குறைவான அத்தனை சிறுவர் சிறுமிகளின் படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இச்சிறுவர்கள் ஒவ்வொருவர் மீதும் கொடூரமாக 11 புள்ளெட்டுக்கள் பாய்ந்துள்ளன.
மேலும் பலியான ஆசிரியர்களில் ஒருவர் சில சிறுவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களை ஒரு அறையில் அடைத்ததுடன் தனது உயிர் போகும் வரை ஒரு சிறுவனை அணைத்து துப்பாக்கிச் சூட்டில் இருந்து காப்பாற்றிய சம்பவம் மேலும் உணர்ச்சிகரமாக பேசப்படுகிறது.

0 கருத்துகள்:

Post a Comment