Search This Blog n

30 December 2012

மாணவி இறப்பு: குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு

 
மாணவியை பாலியல் வன்​கொ​டு​மைக்கு ஆளாக்​கிய ஓட்​டு​நர் ராம் சிங்,​​ அவ​ரது சகோ​த​ரர் முகேஷ்,​​ அக்​ஷய் தாக்​குர்,​​ பவன் மற்​றும் வினய் ஆகிய 6 பேர் மீது டெல்லி பொலிசார் கொலை வழக்கைப் பதிவு செய்​த​னர்.​
இது குறித்து டெல்லி பொலிஸ் ​(சட்​டம்,​​ ஒழுங்கு)​ ஆணை​யர் தர்​மேந்​திர குமார்,​​ செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​ இவ்​வ​ழக்​கில் வரும் ஜன​வரி 3ம் திகதிக்​குள் குற்​றப்​பத்​தி​ரி​கை​யைச் சமர்ப்​பிப்​போம்.​
இவ்வழக்​கில்,​​ கொலைக்​குற்​றத்​துக்​கான இந்​திய தண்​ட​னைச் சட்​டத்​தின் 302ஆவது பிரிவு சேர்க்​கப்​பட்​டுள்​ளது.​
இந்த வழக்கு விசா​ர​ணையை விரைவு நீதி​மன்​றத்​தில் தின​சரி அடிப்​ப​டை​யில் நடத்​து​வ​தற்​காக சிறப்பு அரசு சட்டத்தரனி நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார்.​
குற்​ற​வா​ளி​க​ளுக்கு கடு​மை​யான தண்​ட​னை​யைப் பெற்​றுத் தர தீவிர முயற்சி மேற்​கொள்​வோம்.​
இத்​து​ய​ரச் சம்​ப​வத்​துக்​காக மற்​ற​வர்​க​ளைப் போலவே நாங்​க​ளும் வருத்​த​ம​டைந்​துள்​ளோம்.​
பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​துக்கு எங்​கள் ஆழ்ந்த அனு​தா​பத்​தைத் தெரி​விக்​கி​றோம்.​
6ஆவது குற்​ற​வாளி சிறை​யில் அடைப்பு:​ மாணவி பாலி​யல் பலாத்​கா​ரச் சம்​ப​வத்​தில் தொடர்​பு​டைய 6ஆவது நப​ரான அக்​ஷய் தாக்​குர் டெல்லி கூடு​தல் தலைமை பெரு​ந​கர மாஜிஸ்​தி​ரேட் நீதி​மன்றத்​தில் நீதி​பதி லோகேஷ் குமார் சர்மா முன்பு ஆஜர்​ப​டுத்​தப்​பட்​டார்.​
அவரை ஜன​வரி 9ஆம் திகதி வரை நீதி​மன்​றக் காவ​லில் வைக்​கு​மாறு நீதி​பதி உத்​த​ர​விட்​டார்.​ இதை​ய​டுத்து,​​ அக்​ஷய் தாக்​குர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

0 கருத்துகள்:

Post a Comment