Search This Blog n

07 December 2012

திலீபனின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களினால்

        

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
.இந்திய அரசாங்கத்திற்கு எதிராக 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திலீபன் நினைவாக நல்லூர் ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி புலனாய்வாளர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு சாகனத்தில் வந்த கும்பல் ஒன்றினால் உடைக்கபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
திலீபன் நினைவாக இந்த தூபி அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் சமாதான காலத்தில் நிறுவப்பட்டது. இன்று வரை இந்த தூவி எதுவித சேதங்களும் இன்றி காணப்பட்டு வந்துள்ளது.
யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த தூபி உடைக்கப்பட்டுள்ளது. தூபி உடைப்பு தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை அங்கு நின்ற புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் துரத்தியுள்ளனர்

0 கருத்துகள்:

Post a Comment