Search This Blog n

19 December 2012

டில்லியில் டீசல் வாகனங்களுக்கு தடை !





மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர், ஜெயந்தி நடராஜன் நேற்று, லோக்சபாவில் ’’கடந்த, 2007ம் ஆண்டில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பெங்களூரு, சென்னை, டில்லி, கான்பூர், மும்பை மற்றும் புனே நகரங்களில், காற்றின் மாசு அளவை ஆய்வு செய்தது. இந்நகரங்களில் ஓடும் வாகனங்களால், காற்றின் சுத்தத்தன்மை மாசடைந்து, காற்றில் கலந்துள்ள தூசுகள், 2 சதவீதத்திலிருந்து, 48 சதவீதம் வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
டில்லியில், காற்றில் அதிக மாசு காணப்பட்டதால், 2007ம் ஆண்டிலேயே, டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கலாம் என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்தது.
இதற்காக, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், சுப்ரீம் கோர்ட்டிலும் அறிக்கை அளித்தது.
நடப்பு, 2012ம் ஆண்டில், இ.பி.சி.ஏ., அளித்த அறிக்கையில், டில்லியில் ஓடும் வாகனங்களில், இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட்ட போதிலும், அதன் பலன்கள் கிடைக்கவில்லை. டீசல் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், காற்றில் மாசு மற்றும் நைட்ரஜன் ஆக்சைட் துகள்கள் அதிகரித்துள்ளன என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றில் மாசு அதிகரிப்பதை கட்டுப்படுத்த, பல நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுக்கிறது. அனைத்து வாகனங்களிலும், "பாரத் ஸ்டேஜ் - 4' தரம் பராமரிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில், சல்பர் வெளியேற்றத்தை குறைக்கவும், மாசுக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டாயமாக இயற்கை எரிவாயு பயன்பாடு, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு ஊக்கம், நகருக்குள் தேவையின்றி வருவதை கட்டுப்படுத்த, கூடுதல், பை-பாஸ் சாலைகள் ஏற்படுத்துவது, பொதுவான போக்குவரத்து முறைகளை மேம்படுத்துவது என, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன’’ என்று கூறினார்

0 கருத்துகள்:

Post a Comment