Search This Blog n

23 December 2012

மகாதேவனும் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும்,

          
 

நிறைய தாழ்வு மனப்பான்மை கொண்டவர்! பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தாழ்வு மனப்பான்மையால் தான் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது பாடகி நித்யஸ்ரீயின் கணவர் என்று சொல்வது அவருக்கு பிடிக்காது. மகாதேவனின் மனைவி நித்யஸ்ரீ என்று சொன்னால்தான் அவருக்கு பிடிக்கும். நித்யஸ்ரீயை மற்றவர்கள் புகழ்ந்து பேசுவது மகாதேவனுக்கு பிடிக்காது” எ‌ன்று நித்யஸ்ரீயின் குடும்ப நண்பர்கள் கூ‌றியதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
பாடகி நித்யஸ்ரீயின் பாட்டி டி.கே.பட்டம்மாள் இந்திய அரசின் ‘பத்ம விபூஷன்’ விருதை பெற்றவர். அவர் மிகப்பெரிய கர்நாடக இசை மேதை. நித்யஸ்ரீயின் தந்தை சிவக்குமாரும் மிருதங்க வித்வான், தாயார் லலிதாவும் சிறந்த பாடகி. நித்யஸ்ரீயின் சகோதரி காயத்ரியும் நல்ல பாடகிதான்.
இப்படியொரு பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த நித்யஸ்ரீ செல்வவளம் பெற்றவர். கோட்டூர்புரம் பகுதியில் அவரது குடும்பத்துக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன. புகழிலும், செல்வத்திலும் புகழோடும், செல்வத்தோடும் வாழ்ந்தாலும், நித்யஸ்ரீ கணவர் மகாதேவனுக்கு அடங்கிய பெண்ணாகத்தான் வாழ்ந்து வந்தார்.
13 வருடங்களுக்கு முன்பு அவர்கள் திருமணம் நடந்தது. மகாதேவனும் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், நிறைய தாழ்வு மனப்பான்மை கொண்டவர். ஊர் உலகம் மகாதேவனை, நித்யஸ்ரீயின் கணவர் என்று சொல்வது அவருக்கு பிடிக்காது. மகாதேவனின் மனைவி நித்யஸ்ரீ என்று சொன்னால்தான் அவருக்கு பிடிக்கும்.
நித்யஸ்ரீயை மற்றவர்கள் புகழ்ந்து பேசுவது மகாதேவனுக்கு பிடிக்காது. தனக்கு தெரியாமல் நித்யஸ்ரீ எதையும் செய்யக்கூடாது என்று மகாதேவன் நினைத்தார்.
நித்யஸ்ரீயின் இன்னிசை கச்சேரிகளைக்கூட மதாதேவன்தான் முடிவு செய்வார். மகாதேவன் சொல்லும் கச்சேரியில்தான் நித்யஸ்ரீ கலந்துகொள்ள வேண்டும். தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் நித்யஸ்ரீ கணவரிடமே கொடுத்துவிடுவார். மிகவும் தங்கமான அந்த பெண்ணுக்கு இப்படியொரு சோகம் தாக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தனது தாயார் இறந்தபிறகு, மகாதேவன் மனஉளைச்சலோடு காணப்பட்டார் என்பதும் உண்மை. இதுபோன்ற ஒரு இறுக்கமான சூழலை தாங்கிக்கொண்டு நித்யஸ்ரீ வாழ்ந்து வந்தார். இறுதியில் அவரது தலையில் பெரிய கல்லை தூக்கிப்போட்டுவிட்டு மகாதேவன் இப்படியொரு முடிவை எடுத்திருக்கக்கூடாது எ‌ன்று குடும்ப நண்பர்கள் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

0 கருத்துகள்:

Post a Comment