Search This Blog n

18 December 2012

இராணுவத்தில் தமிழ் பெண்கள் சேர்க்கப்படுவதை எதிர்த்து

           
இலங்கை இராணுவத்தில் தமிழ் பெண்கள் கட்டாயமாகச் சேர்க்கப்படுவதை எதிர்த்து சர்வதேச சமுதாயம் குரல் கொடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
இலங்கை இராணுவத்தில் முதல் முறையாக தமிழ் பெண்களைச் சேர்க்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருகிறது. மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வேலைக்கு விண்ணப்பித்த பெண்களை இராணுவப் பயிற்சிக்கு கட்டாயப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
பயிற்சி முகாம்களில் உள்ள அவர்களைச் சந்திக்க பெற்றோர், குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், தமிழ்ப் பெண்களுக்கு அளிக்கப்படும் இந்தப் பயிற்சி குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார்.
பயிற்சியில் சேர்க்கப்பட்ட 103 பெண்களும் அங்கிருந்து வெளியேற விரும்புவதாகவும், ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்தி பயிற்சி பெற வைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இலங்கை இராணுவம், தமிழ்ப் பெண்களைக் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்ப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
இதனை சர்வதேச சமுதாயம் கண்டிக்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment