Search This Blog n

19 December 2012

டெல்லியில் மாணவி கற்பழிப்பு சம்பவம்

:
 6 பேரையும் தூக்கில் போட போலீஸ் பரிந்துரை
டெல்லியில் உள்ள கல்லூரியில் பிசியோ தெரபி படித்து வரும் 23 வயது மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். தன் நண்பருடன் தெற்கு டெல்லியில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த மாணவிக்கு இந்த கொடூரம் நேர்ந்தது
 இதற்கிடயே மாணவியை கற்பழித்து ஈவு, இரக்கமின்றி தாக்கியவர்களை பிடிக்க டெல்லி போலீசார் மேற்கொண்ட மின்னல் வேக வேட்டைக்கு பயன் கிடைத்தது. குற்றவாளிகள் 6 பேரும் யார்-யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ராம்சிங், பஸ் டிரைவர்.  முருகேஷ். இவன் ராம் சிங்கின் தம்பி. ஒரு ஜிம்மில் உதவியாளராக உள்ளான். விஜய் சர்மா, பழ வியாபாரி. பவன்குப்தா, உதவியாளர் ஆகிய  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்ஷய் தாக்கூர், ராஜு ஆகிய 2 வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க டெல்லி தனிப்படை போலீசார் பீகார், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். குற்றவாளிகள் 6 பேரும் டெல்லியில் ஆர்.கே.புரத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் 6 பேர் மீதும் ஏற்கனவே சில வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது.
குற்றவாளிகள் 6 பேர் மீதும் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 377 (செக்ஸ் சித்ரவதை) மற்றும் 365, 376 (கடத்தி கற்பழித்தல்) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சில கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்தி நேற்று பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஆவேசமாக கோரிக்கை விடுத்தனர். குற்றவாளிகளை உயிருடன் விடக்கூடாது என்று நாடெங்கும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் தீவிரமாகியுள்ளன.
மாணவி கற்பழிக்கப்பட்டது பற்றி 2 வாரத்துக்குள் அறிக்கை தரும்படி டெல்லி மாநில அரசை மத்திய உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய உள்துறை புதிய நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று தெரிகிறது. இந்த நிலையில் மாணவி கற்பழிப்பு குறித்து தினமும் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதற்கு ஏற்ப டெல்லி போலீசாரும் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.
இதுபற்றி டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் கூறுகையில், குற்றவாளிகள் 6 பேரையும் தூக்கில் போட நாங்கள் பரிந்துரை செய்யப் போகிறோம் என்றார். எனவே மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பது உறுதியாகி உள்ளது

0 கருத்துகள்:

Post a Comment