Search This Blog n

01 December 2013

திரைப்படமாக உருவாகும் ஆருஷியின் கொலை வழக்கு

டெல்லி அருகே நொய்டாவில் கடந்த மே மாதம் 2008ம் ஆண்டு டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் ஆகியோரின் ஒரே மகளான ஆருஷி, வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யபட்டார்.
வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மறுநாள் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரட்டைக் கொலை வழக்கில் பல் மருத்துவர்களான ஆருஷியின் தந்தை ராஜேஷ் மற்றும் தாயார் நுபுர் தல்வார் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.

2012-ம் ஆண்டு மே மாதம், ராஜேஷ் மற்றும் நுபுர் இருவரும் சதித்திட்டம் தீட்டி இந்த கொலைகளை செய்து அதன் சாட்சியங்களையும் அழித்துள்ளனர் என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

ஆருஷியும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேமராஜ் இருவரும் படுக்கை அறையில் தகாத முறையில் காணப்பட்டதையடுத்து அவர்கள் இருவரையும் தல்வார் ஜோடி கொன்றனர் என்று சி.பி.ஐ. உறுதிபடக் கூறியது.

5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆருஷியின் பெற்றோர் தாஸ்னா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு சிறை மருத்துவமனையில் பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் கிளப் எஃப். ருண்யார்ட் நேற்று தாஸ்னா சிறைக்கு வந்தார்.

ஆருஷியின் பெற்றோரை சந்திக்க மனு செய்த அவர் இந்த கொலை வழக்கை திரைப்படமாக தயாரிக்க உள்ளதாகவும் இது தொடர்பாக மருத்துவ தம்பதியரை சந்திக்க வேண்டும் என்றும் சிறை அதிகாரிகளிடம் கூறினார்.

அவருக்கு அனுமதி அளிக்க மறுத்த சிறை அதிகாரிகள் சட்டப்படி இரண்டு வாரங்களுக்கு பின்னர் தான் மருத்துவ தம்பதியை சந்திக்க முடியும் என தெரிவித்து அந்த இயக்குனரை திருப்பி அனுப்பி வைத்தனர்.

0 கருத்துகள்:

Post a Comment