Search This Blog n

23 October 2013

மாநாட்டை புறக்கணிப்பதற்கான‌ இந்தியாவில் ஆதரவு


கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்துலக மன்னிப்புச்சபை ஆரம்பித்துள்ள பரப்புரைக்கு இந்தியாவில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அனைத்துலக மன்னிப்புச்சபையின், இந்தியாவுக்கான தலைமை நிறைவேற்று அதிகாரி அனந்தபத்மநாபன் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பரப்புரை கடந்த 5ம் நாள் தொடங்கப்பட்டது என்றும், கொமன்வெல்த் மாநாடு துவங்கும் வரை இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொமன்வெல்த் மாநாட்டில் இருந்து இந்தியா ஒதுங்கிக் கொள்வதன் மூலம், சிறிலங்காவில் மனிதஉரிமைமீறல்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெளிவான சமிக்ஞை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பப்படும்.

இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்றால், சிறிலங்காவில் கடந்த காலத்தில் நடந்த, தற்போது நடக்கும் எண்ணற்ற மனிதஉரிமை மீறல்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாகி விடும் என்றும் அனந்தபத்மநாபன் தெரிவித்துள்ளார்.

போரின் முடிவுக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை, நீதியின் முன் நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள், எண்ணற்ற ஏனைய மனிதஉரமை மீறல்கள் நடக்கின்ற நாட்டில், கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவது வெட்கக்கேடானது என்றும் அனந்தபத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment