Search This Blog n

05 October 2013

துப்பாக்கிச்சண்டை பயங்கரவாதி சுற்றிவளைப்பு


ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து 6 மணி நேரமாக துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.

 தமிழகத்தில் பா,ஜ.,பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டனர். இவர்களில், வேலூரில் வெள்ளையன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என டில்லியில் உள்ள அனைத்து பா.ஜ., நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ., வை சந்தித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
  
இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் நேற்று சென்னையில் பதுங்கியிருந்த போலீஸ் பக்ரூதின் என்பவனை கைது செய்தனர். இவன் கொடுத்த தகவலின்படி இன்று காலையில் சென்னை அருகே ஆந்திர எல்லையான புத்தூரில் பிலால் மாலிக் , பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார்

துப்பாக்கிகளுடன் முற்றுகையிட்டனர். இங்கு போலீசார் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் போலீசார் நோக்கி சுட்டனர். இதனையடுத்து போலீசாருக்கும் , பயங்கரவாதிகள் இடையேயும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
  
மத்திய அரசின் ஆக்டோபஸ் என்ற படையும், தமிழக, ஆந்திர போலீஸ் படையும் இணைந்து இந்த ஆப்ரேஷனை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சண்டையில் தமிழக இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார், போலீசார் 2 பேர் காயமுற்றனர்.

"அல்முஜாகிதீன் படை' :
மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், "போலீஸ்' பக்ருதீனும், "அல்முஜாகிதீன் படை' இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவிக்கின்றனர். இதன் உறுப்பினர்கள், "தியாகப்படை' என்றும் அழைக்கப்படுகின்றனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான்.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவன் மாலிக். இவனை கண்டு பிடித்து தருபவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

0 கருத்துகள்:

Post a Comment