Search This Blog n

26 October 2013

காங்கிரஸ் கட்சிக்கு பச்சை கொடி காட்டுகிறதா அதிமுக?


 காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் காங்கிரஸ் நிர்வாகிகள் அதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

தேர்தல் களத்தில் திமுகவினர் காலைவாரிவிடவே வாய்ப்பு இருக்கிறது என்பது காங்கிரசாரின் கருத்து. இதைத்தான் அதிமுக ஆதரவு காங்கிரசார் பலரும் மேலிடத்துக்கும் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அதிமுக தரப்பிலும் ஜெயலலிதா மீதான பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க காங்கிரஸ் மேலிடத்தை தொடர்பு கொள்ளும் படலங்களும் அரங்கேறி இருக்கின்றன.

காங்கிரஸ் மூத்த தலைவர் மார்க்ரெட் ஆல்வா மூலமாக இத்தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம்.
அதிமுகவின் எதிரியாக கருதப்படும் ப.சிதம்பரம்தான் இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மும்முரம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

ப.சிதம்பரத்தின் பரிந்துரையில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர் ரோசய்யா. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் இணக்கமான போக்கை கொண்டிருப்பவர் ரோசய்யா. எதிரிகளாக இருக்கும்

ப.சிதம்பரத்தையும் ,ஜெயலலிதாவையும் ரோசய்யா தமது தனிப்பட்ட கைப்பேசியில் பேசவைத்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் அதிமுகவைப் பொறுத்தவரையில் தேர்தலுக்குப் பின்னர்தான் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உறுதியாக இருப்போம் என்பது கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் ஜெயலலிதா இப்படியெல்லாம் செய்யக் கூடியவர் என்பதால் தேர்தலின்போதே கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பதில் கறாராக இருக்கிறது காங்கிரஸ்.
 

0 கருத்துகள்:

Post a Comment