Search This Blog n

09 November 2014

போலி டாக்டர்கள் 4 பேர் கைது - மக்களிடையே அதிர்ச்சி!

தருமபுரியில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பிக்கிலி மலைக்கிராமத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ். இவருக்கு சில நாட்களுக்கு முன் கீழே விழுந்ததில் கண்ணில் அடி பட்டிருக்கிறது. அதைச் சரி செய்வதற்காக சந்தோஷை அழைத்துக்கொண்டு அவரது அப்பா பட்டாபிராமன், அந்த பகுதியில் கிளினிக் வைத்திருந்த ஜீவா கணேசனை அணுகியிருக்கிறார்கள். ஜீவா கணேசனும் அதற்கு உரிய சிகிச்சை வழங்குவதாக கூறி சிகிச்சை அளித்திருக்கிறார், இதில், சந்தோஷுடைய முகம் வீங்கி கண்களில் தண்ணீர் வர ஆரம்பித்திருக்கிறது.
    அடுத்த கட்டமாக பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சந்தோஷை பரிசோதித்த டாக்டர் கண் பார்வை பாதிக்கப்படும் நிலையில் உள்ளதை கண்டுபிடித்திருக்கிறார். இதையடுத்து, சந்தோஷுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பரிந்துரைத்திருக்கிறார். அதன் பிறகுதான் ஜீவா கணசேன் தவறான சிகிச்சை கொடுத்தது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, சந்தோஷின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,
 ஜீவாகணேசனின் கிளினிக்கில் சோதனை நடத்தினர். இதில், ஜீவா கணேசன் டாக்டரே இல்லை என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது.
மேலும், அதே பிக்கிலி பகுதியில் பச்சியம்மாள் என்பவர் வைத்திருந்த கிளினிக்கை சோதனை நடத்த அவர் ப்ளஸ் டூ வரை தான் படித்திருந்தார். அதேபோல், காரிமங்கலத்தில் நடந்த சோதனையில், செந்தில் மற்றும் சண்முகம் ஆகிய இருவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சையளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து ஜீவா கணேசன், பச்சியம்மாள், செந்தில், சண்முகம் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலி டாக்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment