Search This Blog n

26 November 2014

திருப்பதி திருமலையை நவீன நகரமாக்க தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருமலை நகரை ஆன்மிக நகரமாகவும் டவுன்ஷிப் நகரமாகவும் மாற்ற தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி திருமலையை சுற்றி 12 கிலோ மீட்டர் பரப்பளவில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கவும், அதன் அருகிலேயே சாலை அமைக்கப்பட்டு தொடர்ந்து அந்த சாலைகளில் ரோந்து செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மலையில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்கவும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேவஸ்தான அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். திருப்பதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் திருமலை நகர் உள்ளது. இதில் கோயில் தெப்பகுளம், அன்னபிரசாத கூடம், தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா, பக்தர்கள் ஓய்வறைகள், உள்ளூர் பொதுமக்கள் தங்கும் பாலாஜி நகர் மற்றும் சாலைகள் நகர்ப்புறமாக உள்ளது.இங்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கின்றன. வருங்காலத்தில் வாகனத்தின் எண்ணிக்கையும், பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால், 50 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பாதுகாப்பு வளையும் அமைக்கப்பட்டுள்ளது.இதற்காக திருமலையில் இருந்து திருப்பதி செல்லும் மலைபாதையில் உள்ள 57வது வளைவில் இருந்து பாலாஜி நகர் வழியாக ஜிஎன்சி சோதனை சாவடி வரை வெளிப்புற பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்க தேவஸ்தான பொறியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment