Search This Blog n

28 November 2014

இளவரசியின் மருமகன்: யலலிதாவின் பதவிக்கு வருகிறார்!!

சூடுபிடிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறவிருக்கும் எம்எல்ஏ இடைத்தேர்தலில் இளவரசியின் மருமகன் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொகுதியின் எம்.எல்.ஏ உயிரிழந்தாலோ அல்லது பதவியை ராஜினாமா செய்தாலோ அப்பகுதியில் இடைத்தேர்தல் வரும்.

அந்த வகையில், தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு போனதையடுத்து முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கத்தின் எம்எல்ஏ பதவியையும் இழந்தார்.

இதனால், ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் ஆரம்பமாகவிருக்கிறது. இத்தொகுதியில், அதிகமாக உள்ள முத்தரையர் அல்லது முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் ஒருவருக்குத்தான் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எனவே எந்த சிக்கலும் இல்லாத வேட்பாளராக இருக்க வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அதிமுக சார்பில் இங்கே போட்டியிடப்போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுடன் கூட்டாக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட உடன் பிறவா சகோதரிகளான ஜெயலலிதா, சசிகலாவுடன் ஜெயிலுக்குப் போன இளவரசியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தான் அதிமுக வேட்பாளர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளவரசியின் இரண்டாவது மருமகன் ராஜராஜன் தான் அந்த வேட்பாளர் என அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment