Search This Blog n

26 November 2014

மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயிலை ஓட்டிப் பார்த்துப் பரிசோதித்துள்ளனர். இந்த ரயிலை ஓட்டியவர் பெண் என்ஜின் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மார்க்கத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தி்ல மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது. தண்டவாளம் அமைப்பு, சிக்னல்கள், மின்சார இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படைப் பணிகளும் முடிந்து விட்டன. கோயம்பேடு, சி.எம். பி.டி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல் மற்றும் ஆலந்தூர் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் உள்ளது. இங்கு டிக்கெட் கவுண்டர் உள்ளிட்ட அமைப்பது உள்ளிட்ட அனைத்துக் கட்டுமான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ரயில்கள் இயக்கி பரிசோதனையும் நடந்து வருகிறது. சோதனையின்போது, சிக்னல், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment