Search This Blog n

01 November 2014

நோக்கியா தொழிற்சாலை இன்று முதல் மூடப்படுகிறது

 பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கி வந்தது. உலக அளவில் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலைகளில் ஒன்றான இங்கு நேரடியாக 8 ஆயிரம் பேரும், மறைமுகமாக 25 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர்.
இந்த நோக்கியா தொழிற்சாலை கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கியது. இதைத்தொடர்ந்து இந்த ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்தது. இது தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் வரி ஏய்ப்பு காரணமாக பல்வேறு சிக்கல்கள் நீடித்ததால், இந்த ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தை நவம்பர் 1-ந் தேதி (இன்று) முதல் மூடப்போவதாக நோக்கியா நிறுவனம் அறிவித்தது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சிகள், இந்த தொழிற்சாலையை மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
இந்தநிலையில் நோக்கியா தொழிற்சாலை இன்றுடன் மூடப்படுவதாக நோக்கியா நிறுவனம் நேற்று உறுதியாக அறிவித்தது. இது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment