Search This Blog n

08 November 2014

மக்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

 சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தக் கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை
எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது.
சாதிவாரி கணக்கெடுப்பு எதிர்ப்பும், ஆதரவும் - உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், தமிழக பா.ஜ.க.வோ இது நியாயமான தீர்ப்பு என்று கூறியுள்ளது. சாதிவாரி புள்ளி விவரங்கள் தேவையில்லை என்பதை நீதிமன்ற தீர்ப்பு வலியுறுத்துகிறது என்று பாஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அரசியல் அமைப்பு கூட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment